ஈரான் பொருளாதாரத் தடையால் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது!
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நேற்றுப் பகல்முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையின் காரணமாக இலங்கைக்கு கப்பல் வராததே இதற்குக் காரணமென இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுசந்தசில்வா தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப் படும் எண்ணையை மாத்திரமே சுத்திகரிக்க முடியுமான வரையில் மட்டுமே நிருவியுள்ளத்தால் வேறு எந்த நாட்டு மசகு எண்ணையெயும் இங்கு சுத்திகரிக்க முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1 comments :
இதன்மூலம் பல ஏழை மக்களும் வேலை வாய்ப்பை இழக்க வேண்டியுள்ளது. அமெரிக்கா இவர்களுக்கு உதவுமா?? VS.Drammen
Post a Comment