Wednesday, November 6, 2013

ஜவரையும் ஏன் கொலை செய்தேன் - அநுராதபுர கொலைச்சம்பவத்தின் பிரதான கொலைகாரன் வாக்குமூலம்!

அநுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ வீரரொருவர் பொலிஸார் கைது செய்தனர் சந்தேக நபரிடம் மேற்கொள் ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த நபர் திடக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சடலங்கள் மீட்கப்பட்ட 12 மணிநேரத்திற்கு பின்னர் ஹசலக்கையில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரொருவர் தனது வாக்குமூலத்தில், ஹசலக்கையில் காணியொன்றை விற்பனை செய்துவிட்டு பணத்துடன் வந்தவர்கள் ஐவரையும் நடுநிசியில் வைத்து வீச்சு கத்தியால் வெட்டிக்கொன்றேன் எனவும் அதன்பின்னர் சுமார் இரண்டரை இலட்சம் ரூபாவை களவெடுத்துகொண்டு இலைக்கஞ்சியும் குடித்துவிட்டு பஸ்ஸொன்றில் ஹசலக்க சென்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாக்குமூலத்தில், தனது நண்பனான பிரியந்தவுடன் அவரது வீட்டில் வைத்து அன்றிரவு மது அருந்தினேன். அதன்பின்னர் முதலில் நண்பனின் தாயை கொலைசெய்தேன். அம்மாவை கொலை செய்வதை நண்பன் கண்டுவிட்டான். அதன்பின்னர் நண்பனை கொலை செய்த வீட்டிலிருந்த ஏனையோர் எஞ்சியதை யடுத்தே இந்த சம்பவம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டிலி ருந்த ஐவரையும் கொலை செய்தேன் என்றும் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

ஐவரையும் கொலை செய்ததன் பின்னர் நண்பனின் உடையை உடுத்திக்கொண்டு நண்பனின் சைக்கிளில் சிறிது தூரம் வந்து சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டு விட்டு பின்னர் பஸ்ஸில் ஏறி ஹசலக்கவிற்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்து ள்ளார். முச்சக்கரவண்டிக்கான தவனைக்கட்டணத்தை செலுத்தவே ஐவரையும் தான் படுகொலை செய்ததாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் அவரை கைது செய்யும் போது அவர் 85 ஆயிரம் ரூபாவை செலவழித்து தங்க சங்கிலியொன்றையும் கை சங்கிலியொன்றையும் கொள்வனவு செய்திருந்ததாகவும் மீதமாக ஒரு இலட்சத்து 37 ஆயிரம் ரூபா மீதம் இருந்ததுள்ளது. கொலைகளுக்கு பின்னர் சந்தேகநபர் மதுபானம் அருந்தியிருந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com