பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்ட "பிரட்ரிக் நஓமான்" தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரல்!
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரட்ரிக் நஓமான் மன்றம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளில் ஈடுப்பட்டுள்ள குற்றபுலனா ய்வு பிரிவினர் கொழும்பு மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இது தொடர்பாக அறிவித்துள்ளனர்.
ஜேர்மன் அரசுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் செயற்படும் பிரட்ரிக் நஓமான் மன்றம் குறித்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி 21ம் திகதிக்கு கொழும்பு மெஜிஸ்ட்ரேட் நீதவான் ஜிஹான் பிலபிட்டிய ஒத்திவைத்தார்.
அன்றைய தினம் விசாரணைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையொன்றை நீதிமன்றத்திற்கு சமர்பிக்குமாறும் அவர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment