Wednesday, November 13, 2013

சாரதி,நடத்துனர் எவராவது கடமை நேரத்தில் கைத்தொலைபேசி பாவித்தால் அறிவிக்கவும் - ஊவா இ.போ.ச. பிராந்திய முகாமையாளர்!

ஊவா மாகாணத்தின் சேவையிலீடுப் படுத்தப்பட்டிருக்கும் இ.போ.ச பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கட மை வேளையில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்து வார்களாயின் அது தொடர்பாக ஊவா மாகாண இ.போ.ச பிராந்திய முகாமையாளருக்கு உடன் அறிவிக்கும்படி பஸ் பயணிகள் கேட்கப்பட்டுள்ளனர்.பூணாகலையில் இடம்பெற் ற கோர பஸ் விபத்தினையடுத்து போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கட மை வேளையில் கைத்தொலைபேசிகளை பாவிப்பதை தடை செய்திருந்தார்.

இத் தடையினை மீறி செயற்படும் ஊவா மாகாண இ. போ. ச.சாரதிகள் மற்றும் நடத் துனர்கள் குறித்து பஸ் பிரயாணிகள் ஊவா மாகாண இ.போ.ச. பிராந்திய முகாமை யாளர் பிரேமலால் சில்வாவிற்கு 077 1057700 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண் டு அறிவிக்கும்படி பயணிகள் கேட்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com