Tuesday, November 26, 2013

கமரூனின் கருத்து தமிழ் மக்­களின் வாக்­கு­களைப் பெறும் நோக்­கி­லா­னது

பிரித்­தா­னிய பிர­தமர் இலங்கை வந்­ததும் வடக்­கிற்கு சென்­றதும் அங்கு தமிழ் மக்­களை குழப்­பி­ய­டித்து பின்னர் தன் கருத்துகளை முன்வைத்தமையானது தனது நாட்டில் தமிழ் மக்களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்ளும் அர­சியல் நோக்­கி­லேயே ஆகும் என்று பிர­தமர் தி.மு. ஜய­ரத்ன நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாராளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற வரவு- செல­வுத்­திட்­டத்தின் மூன்றாம் நாள் விவா­தத்தை ஆரம்­பித்து வைத்துப் பேசு­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

பிர­தமர் இங்கு மேலும் கூறு­கையில்,
2014ஆம் ஆண்­டுக்­கான வரவு- செல­வுத்­திட்­ட­மா­னது மனி­தனும் மனிதன் சார்ந்த இயற்­கையும் பாரிய நன்­மை­களை அடையும் விதத்தில் அமைந்­தி­ருக்­கின்­றது என்­பதை என்னால் கூற­மு­டியும்.

எதிர்க்­கட்­சி­யினால் இதனைப் புரிந்து நன்­மை­களை அனு­ப­விக்க முடியும்.
இவ் வரவு செல­வுத் திட்­டத்தில் எத்­த­கைய நன்மை கிடைத்­தி­ருக்­கின்­றது என்­பதை மக்கள் நன்கு உணர்ந்து கொள்வர்.

சுகா­தா­ரத்­துறை, பொலிஸ்­துறை ஆகி­ய­வற்­றுக்கு புதி­தாக ஆட்­களை இணைத்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. கிரா­மத்து மக்கள் இந்த வரவு- செல­வுத்­திட்­டத்தை விழுந்து வணங்கி வர­வேற்­றுள்­ளனர்.

இலங்­கைக்கு வந்த பிரித்­தா­னியப் பிர­தமர் வடக்­கிற்கு சென்று தமிழ் மக்­களை குழப்­பி­ய­டிப்­ப­தற்கு முயற்சி செய்தார்.

அது­மட்­டு­மின்றி அவர் தமிழ் மக்­களின் வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ளும் அர­சியல் நோக்­கி­லேயே இதனைச் செய்துள்ளார்.

இதேவேளை, 2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் தொடர்பில் கவிதையால் புகழ்பாடி ஜனாதிபதிக்கு நன்றியும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com