Friday, November 1, 2013

வவுனியாவில் பண்டாரவன்னியன் நினைவுதின நிகழ்வில் வாங்கிக் கட்டிய கிழட்டுத் தலைவர்கள்

ஏகாதிபத்திய வெள்ளையருக்கு எதிராக இறுதி வரை போராடிய வன்னி மண்ணின் மைந்தன் அடங்கா தமிழன் மாவீரன் பண்டாரவன்னியனின் 210 ஆவது நினைவு தின நிகழ்வு மிகவும் சிறப்பாக சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் தலைவரும் பண்டாரவன்னியன் நற்பணி மன்றத்தின் தலைவரும் ஆகிய சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.

சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோதரராரலிங்கம், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் வடமாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், இ.இந்திரராஜா, ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, தர்மபால செனவிரத்ன ஆகியோரும் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவர் சேனாதிராஜா, கலை இலக்கிய நண்பர்கள் வட்டத் தலைவர் தமிழ்மணி அகளங்கன், சேக்கிழார் மன்றத் தலைவர் கண்ணகி தேவராசா, ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வினை அலங்கரிக்கும் பொருட்டு தமிழ் மா மன்றத்தினர் கவியரங்கு ஒன்றினை சிறப்பாக மேற்கொண்டனர். அதில் தலைமைப் பதவிகளை தமக்கு என தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ள முயலுபவர்கள் மீது போட்டுத் தாக்கப்பட்டது. வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கமானது இளைஞர் என்ற பெயரில் முதியோர் சங்கமாக இயங்குகின்றது. இதில் குறிப்பிட்ட சில அங்கத்தவர்கள் மட்டுமே உள்ளதுடன் புதியவர்களை உள்வாங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

உறவு முறையான முதியோர்களால் இச் சங்கம் இயக்கப்படுவதுடன் தமது பதவி போய்விடும் என்று புதியவர்களையும் உள்வாங்காமல் செயற்பட்ட இச் சங்கம் மீது அதிருப்தி அடைந்த இளைஞர்கள் பண்டாரவன்னியன் நிகழ்வில் கவித்துளிகளால் அவர்களை போட்டுத் தாக்கியுள்ளனர். இதனால் வெட்கி தலைகுனிந்து கொண்டு இருந்த இந்ந முதியோர்களைப் பார்த்து அவர்கள் இளைஞர்கள் தான் என்பதை அவர்களின் மனைவி தான் சொல்ல வேண்டும் என கவி வரிகள் தீட்டித் தீர்தன. அளவான ஆட்கள் தொப்பியைப் போடுங்கள் என்ற பின் கூட வெட்கம் கெட்டு சூடுசுறனையற்றவர்களாக இருந்தார்கள். அது சரி பதவிக்காக அலைபவர்களுக்கும் தமக்கு தாமே பட்டங்களை சூட்டுக் கொண்டு திரிபவர்களுக்கும் எங்கே சுறனை இருக்கப் போகிறது.

இளையவர்கள் முன்வருவதற்கு தயாராக உள்ளார்கள் என்பது பண்டாரவன்னியன் நிகழ்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கிழடுகள் வழிவிடுமோ என்பது தான் புரியாத புதிராகவுள்ளது.

எனவே, சுத்தானந்தா இந்து முதியோர் சங்கமாக அதனை மாற்றி கிழடுகள் நிர்வாகம் செய்யட்டும். இளைஞர் சங்கமாக தாம் ஒன்றை தொடங்கலாம் என கருதுவதாக இளைஞர்கள் கூறுகின்றனர். இளைஞர் என்றால் யார் என்று தெரியாத இவர்களா தலைவர்கள்?

No comments:

Post a Comment