Friday, November 22, 2013

பெண் நோயாளிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வைத்தியர் கைது!

கனடாவில் சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளிகள் 21 பேருக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபரேஷன் தியேட்டரில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த வைத்தியர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.கனடா தலைநகர் ஒடாவாவின் மிகப்பெரிய நகரமான டொரான்டோவில் யார்க் என்ற பொது மருத்துவமனை உள்ளது.இங்கு கடந்த 2010ம் ஆண்டில் மயக்க மருந்து நிபுணராக வைத்தியர் ஜார்ஜ் தூட்நாட் பணியாற்றினார். அவர் பணியில் இருந்த போது, தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளிகள் 21 பேருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார்.

பின் ஆபரேஷன் தியேட்டரில் பாதி மயக்கத்தில் இருந்த அந்த பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.மயக்க நிலையில் இருந்த பெண் நோயாளிகளால் வைத்தியர் தவறாக நடந்து கொண்டதை உணர முடிந்தது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.பின்னர் மயக்கம் தெளிந்த நிலையில் அதிர்ச்சியில் உறைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் தனித்தனியாக வைத்தியர் மீது புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் கனடாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து டொரான்டோ பொலிசார் வழக்கு பதிவு செய்து பெண் நோயாளிகளை சீரழித்ததாக வைத்தியர் ஜார்ஜை கைது செய்தனர்.இந்த வழக்கு ஓண்டாரியோ நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டேவிட் மிக்கோம்ப், பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட ஜார்ஜ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஜார்ஜ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment