யாழ். உடுவில் மகளிர் கல்லூரி சிற்றுண்டிச்சாலை பெண் ஊழியர் ஒருவர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து கல்லூரி முழுவதும் சுகாதாரப் பரிசோதகரினால் புகையூட்டப்பட்டுள்ளது.
ஒரு சில தினங்களுக்கு முன் குறித்த பெண் ஊழியர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சில தினத்தில் டெங்கு நோய்த்தாக்கம் இருப்பதாக இனங்காணப்பட்டதையடுத்து, பாடசாலை முழுவதும் புகையூட்டல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்கும் இப்பாடசாலையில் மாணவர்களும் டெங்குநோய்த் தாக்கத்திற்கு உள்ளாகக் கூடாது என்பதற்காக உடுவில் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து இரண்டாவது முறையாகவும் புகையூட்டல் செயற்பாட்டினை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உடுவில் பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment