கிழட்டுத் தலைவரை போட்டுத் தாக்கிய செல்வம் எம்.பியும் செல்வத்தை போட்டுத் தாக்கிய கிழட்டுத் தலைவரும்
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வவுனியாவைச் சேர்ந்த வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் சில சங்கங்களின் தலைவர்கள், பண முதலாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதில் உரை நிகழ்த்திய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, கலாசார மண்டபத்தில் கடந்த 31 ஆம் திகதி நடைபெற்ற பண்டாரவன்னியன் நிகழ்வு நாளை ஞாபகப்படுத்தி அன்றைய தினம் இடம்பெற்ற கவியரங்கு மற்றும் நாடகம் மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த கலைஞர்கள் உண்மைகளை வெளிக் நாசூக்காக வெளிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும் எனக் கூறினார்.
இதனால் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவர் (இளைஞர் சங்கத்தின் கிழட்டுத் தலைவர்) கடுப்பாகினார். அவரின் அருகில் இருந்தவர்கள் ஏன் அங்கிள் உங்கட முகம் ஒரு மாதிரி ஆகிட்டு என்று ஒருவர் கேட்க, உவங்க அன்றைக்கு பண்டாரவன்னியன் நினைவு நாளில் என்னைத் தான் இலக்கு வைத்து தலைமையை விட்டுக் கொடுக்காத கிழடுகள் என்று கவிதை வாசித்தவங்கள். ஆனால் நாம் எவ்வளவு செய்திருக்கிறம் என்று அவங்களுக்கு தெரியாது. சின்னப்பிள்ளைத் தானமாக கதைக்கிறாங்க என்றார். அத்துடன் அதை சரி என்று செல்வம் போய் பாராட்டுறார் பார் தம்பி என்றார்.
அது சரி, நீங்கள் ஏதோ செய்ததீங்கள் என்றும் அது உவங்களுக்கு தெரியாது என்றும் சொல்லிட்டீங்க. என்ன செய்தனீங்கள். அவங்களுக்கு தெரியிறத விட உங்களுக்கு செய்தது எதையாவது சொல்ல முடியுமா என்று சிரித்தார் அருகில் இருந்தவர்.
கூட்டத்தின் இறுதி கட்டம் நெருங்கிய போது பேசிய கிழட்டுத் தலைவர் இப்ப மாகாணசபை உறுப்பினர்கள் வந்த படியால் அவர்களை எல்லா நிகழ்வுகளுக்கும் கூப்பிட முடியுதம். முந்தி என்றால் பாராளுமன்ற உறுப்பினர்களை கூப்பிட முடியாது. ஏன் என்றால் அவர்கள் இங்கு இருப்பதில்லை எனக் கூறி செல்வத்தைப் பார்த்து சிரித்தார்.
தான் அடிக்கடி இந்தியாவில தானே நிற்கிறனான் என்று நக்கல் அடித்ததை உணர்ந்த செல்வம் எழும்பி போட்டாராம்.
வவுனியா நகரசபைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது என்று அறிந்ததும் எல்லாரும் மேடையில ஏறத் தொடங்கீட்டாங்க. ஒரு ஆர்பாட்டத்தை அரசுக் கெதிராக தொடங்கினால் தான் இவர்களை கட்டுப்படுத்தலாம். இல்லாட்ட எல்லா நிகழ்விலையும் வந்திருவாங்க குழப்புறதிற்கு என்கின்றனர் மக்கள்.
0 comments :
Post a Comment