கொழும்புக்கு வந்த மட்டு.மிக்கேல் கல்லூரி மாணவன் நீச்சல் தடாகத்தில் மூழ்கி மரணம்!
கொழும்பு புனித தோமஸ் கல்லூரிக்கும், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும் இடையில் நடைபெறவிருந்த கிரோதர் சலன்ஞ் வெற்றிக் கிண்ணத்துக்கான கூடைப்பந்தா ட்டப் போட்டிக்கு கலந்து கொள்வதற்காக, மட்டக்களப்பிலி ருந்து கொழும்புக்கு வந்த மட்டு.மிக்கேல் கல்லூரி பாட சாலை மாணவனொருவன் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயி ரிழந்துள்ளார். யூஜின் டிலக்சன், வயது- 15 என்ற மாண வனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கறித்த போட்டியில் கலந்து கொள்வதற்கு மட்டக்களப்பிலிருந்து நேற்றைய தினம் சென்ற புனித மிக்கேல் கல்லூரியின் மாணவர்கள் 30பேர், புனித தோமஸ் கல்லூரியின் நீச்சல் தடாகத்தில் நீராடிவிட்டு இரவு உணவுக்காகச் சென்றுள்ளனர். அப்போது மாணவர் ஒருவரைக் காணவில்லை என்று தேடியபோது அவர் நீச்சல் தடாகத்தில் ஆழமான பகுதியில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
களுபோவில வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட தாகவும், இன்றைய தினம் மட்டக்களப்புக்கு சடலம் கொண்டு வரப்படுகிறது என பயிற்றுவிப்பாளர் தெரிவித்தார். இதேவேளை, மாணவனின் மரணம் காரணமாக கூடைப்பந்தாட்டப் போட்டி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment