Saturday, November 16, 2013

யுத்தத்தின் பின்னர் மேற்கொண்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் குறைவாக மதிப்பிட்டுள்ளாராம் - முரளிதரன்

யுத்தத்தின் பின்னர் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபி விருத்திகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் குறைவா கவே மதிப்பீடு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணி யின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்து ள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ் வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நான் விளையாட்டு வீரன் அரசியல் பற்றி அவ்வளவாக நினைப்பதில்லை என முரளிதரன் குறிப்பிட்டார்.

எனினும் கடந்த 30 வருடங்களாக வடக்கில் பிரச்சினை உள்ளது என்பது தெரியும். அங்கு எவரும் சென்று வர முடியாது என்பது தெரியும். யுத்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையுடன் சென்று அங்குள்ள நிலைமைகளை அறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இன்று சாதாரணமாக அங்கு சென்று வர முடியும். அந்தப் பகுதிகள் 100 வீதம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளதென முரளிதரன் கூறினார்.

பிரித்தானிய பிரதமர் சரியா அல்லது பிழையா என தன்னால் கூறமுடியாத என குறிப்பிட்ட முரளி, அவர் வடக்கு பற்றி தெரிந்திருக்கவில்லை. பிரித்தானியாவில் இருந்து வந்து நேற்று மட்டுமே அங்கு சென்று பார்வையிட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவந்த டேவிட் கெமருன் இன்று முரளிதரனை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஈய ஈழ தேசியம்November 17, 2013 at 1:35 AM

    இங்கிலாந்தில் கிடைக்க கூடிய புலி பன்னாடைகளின் வாக்குகளை அறுவடை செய்வதிற்காக டேவிட் கெமருன் நடத்திய அரசியல் நாடகம் கண்டிக்க தக்கது.

    ReplyDelete