காலியில் பாடசாலை மாணவி குழந்தை பெற்ற கதை தெரியுமோ?
காலி - மஹமோதர வைத்தியசாலையில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
கடந்த 6ம் திகதி காலி - மஹமோதர வைத்திய சாலையில் 15 வயது பாடசாலை மாணவி குழந்தை பெற்றெடுத்தார்.
வயிற்று வலியால் துடித்த மாணவியை பெற்றோர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, மாணவி கர்ப்பம் தரித்திருப்பது தெரியவந்தது.
காலி - வஞ்சாவல பிரதேச 19 வயது இளைஞர் ஒருவருடன் குறித்த பாடசாலை மாணவி வைத்திருந்த காதல் தொடர்பால் அவர் கர்ப்பம் தரித்திருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 comments :
it is a surprise may be the parents are totally handicapped blind people
Post a Comment