Friday, November 8, 2013

இனி அழத் தேவையில்லை வெட்டும் போது கண்ணீர் வராத வெங்காயம் கண்டுபிடிப்பு!

கண்ணீர் வரவழைக்காத வெங்காயத்தை, அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது குறித்து இந்த வெங்காயத்தை உருவாக்கியுள்ள விஞ்ஞானி, கோலின் இயாடி கூறியதாவது, சமையலில் பெரும் பங்கு வகிக்கும் வெங்காயம், அதை உரிப்பவர்களுக்கு கண்ணீரை வர வழைக்கிறது.

வெங்காயத்தில் உள்ள கந்தக அமிலம் தான், கண்ணீரை வரவழைக்கிறது.எனவே, கந்தக அமில தன்மையில் மாற்றம் செய்து, புதுவகை வெங்காயத்தை உருவாக்கியுள்ளோம். இந்த புது வெங்காயம், கண்ணீரை வரவழைக்காது. பூண்டில் உள்ள அனைத்து குணங்களும், புது வெங்காயத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை, பூண்டுக்கு உண்டு. அந்த குணங்கள், புது வெங்காயத்தில் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் இதய சம்பந்தமான நோய்கள் தவிர்க்கப்படும், உடல் எடையும் குறையும். இவ்வாறு கோலின் கூறினார்.இந்த வெங்காயம் எப்போது சந்தைக்கு வரும் என்பதை, அவர் குறிப்பிடவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com