பிரபல கல்விமான் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களுக்குபாராட்டு விழா
முதுபெரும் கல்விமான், நிர்வாகி, ஆய்வாளர், மேடைப் பேச்சாளர், பன்னூலாசிரியர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் ஒரு கிராமத்து சிறுவனின் பயணம் எனும் அவரது 'வாழ்வியல்' நூல் வெளியீட்டு விழா என்பன நாளை 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு தெஹிவளையில் அமைந்துள்ள சஹரான் மண்டபத்தில் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒய்வு பெற்ற வலயக் கல்விப்பணிப்பாளர் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப் பிரிவு தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ்.மெளனகுரு, கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் பழைய மாணவரான டபிள்யு. ரத்னதேரர், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகியவற்றின் தலைவர் அல்ஹாஜ் என்.எம் அமீன், கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி முன்னாள் அதிபர் சட்டத்தரணி ரி.கே.அசூர் ஆகியோர் பாராட்டுரைகளை நிகழ்த்துவார்கள்.
டாக்டர் தாஸீம் அஹமட் வரவேற்புரையையும் அறிமுக உரையையும் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஏ.பீர்முகம்மது நூல் அறிமுக உரையையும் இவ் விழாவில் நிகழ்த்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
(ஏ.எல்.ஜுனைதீன்)
0 comments :
Post a Comment