Saturday, November 2, 2013

சமூகத்தில் மகிழ்ச்சியும் புரிந்துணர்வும் ஓங்கட்டும்! -தீபாவளிச் செய்தியில் ஜனாதிபதி

தீயவற்றை நீக்கி நன்மையையும்- அறியாமையை நீக்கி அறிவுடமையையும் இருளை நீக்கி ஒளியையும் வெற்றி கொள்வதை தீபத்திருநாள் அடையாளப்படுத்தி நிற்கிறது.

வழிபாடுகள்- ஆன்மீக வணக்கங்கள் மூலம் இலங்கை வாழ் இந்துக் கள் இந்த விசேட பண்டிகையை கொண்டாடுவதில் உலகெங் கிலும் உள்ள இந்து மக்களுடன்இணைந்துகொள்கின்றனர்.

அறியாமை யிலிருந்து எழும் தீயவற்றை வெற்றி கொள்வதற்கு அறிவுடைமையையும் புரிந்துணர்வையும் அடைந்துகொண்ட மைக்காக தெய்வங்களுக்கு தங்களது நன்றியை வெளிப்படுத்தும்முகமாக கோயில்களில் விளக்கேற்றி வீடுகளை விளக்குகளால் அலங்கரிக்கின்றனர்.

இது உலகின் சடப்பெறுமானங்களால் நிறைந்த மனித நடைமுறைகளைக் கடந்த இந்து சமயத்தின் உயர்ந்த ஆன்மீகப் பெறுமானங்களின் ஒரு கொண்டாட்டமாகும்.

இந்து சமயத்தின் சகல ஆன்மீகப் பெறுமானங்களினாலும் ஒதுக்கப்படும் வன்முறை மற்றும் பகைமைகொண்ட மூன்று தசாப்தகால போராட்டத்தின் பின்னர் புதிய நல்லிணக்க உணர்வில் வேற்றுமைகளைக் களைந்து சமூகங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வை வளர்த்து- சுபீட்சத்தை அதிகரிக்கும் தீபாவளி இந்துக்களுக்கான ஒரு முக்கிய நிகழ்வாகும்.

அன்புணர்வும் அர்ப்பணமும் நிறைந்த இந்தத் தீபாவளித் திருநாள் இந்து சமய போதனைகளைப் பின்பற்றும் எல்லோர் மத்தியிலும் மகிழ்ச்சியையும் சமாதான த்தையும் புரிந்துணர்வையும் கொண்டு வரவேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

இலங்கைவாழ் இந்துக்களுக்கு எனது மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment