Tuesday, November 12, 2013

மகனின் மகளை வல்லுறவுக்குட்படுத்திய மாமன் கைது!

தனது மகனின் மனைவியான 17 வயதான மருமகளை தனது மகளின் துணைக்கு என ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மாமா ஒருவரை கைது செய்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆண்டிகம புத்திகமஎனும் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆனமடுவ கராயக்குளம் பொலிஸ் கிராமத்தில் வசிக்கும் 46 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

சம்பவ தினம் சந்தேக நபர் தனது மருமகளின் வீட்டுக்குச் சென்று தனது வீட்டில் தனது மகள் தனிமையில் இருப்பதாகவும், அவளுக்குத் துணையாக இருக்க வருமாறும் கூறி தனது மகனின் மனைவியை அவளது வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இவ்வாறு தனது மருமகளை ஏமாற்றி அழைத்து வந்ததன் பின்னரே தனது வீட்டில் வைத்து அவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது தந்தையுடன் சென்ற தனது மனைவியைத் தேடிச் சென்ற குறித்த யுவதியின் கணவரிடம் அவ்யுவதி தன் மீது தனது மாமனார் மேற்கொண்ட குற்றச்செயல் தொடர்பில் முறையிட்டுள்ளார். இதன் பின்னர் பாதிக்கப்பட்ட யுவதியுடன் அவளது கணவரும் ஆன¬மடுவ பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரான பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை வல்லுறவுக்கு உட்படுத்திய சமயம் தனது மாமனார் மதுபோதையில் இருந்ததாகவும் அப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் வைத்திய பரிசோதனைக்காக ஆனமடு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனமடு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(எம்எம்)

No comments:

Post a Comment