வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் கல்வி அமைச்சின் கட்டளைளையை மீறி செயல்படுகின்றதா? மௌனம் காக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்
தமிழ் மக்களின் பண்டிகைகளில் முக்கியமான ஒரு பண்டிகையே தீபாவளி ஆகும். சிங்கள மக்கள் இதனை கொண்டாடாத போதும் தமிழ் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் நலனையும் அவர்களது விசேட வழிபாடுகள், கொண்டாட்டங்கள் என்பவற்றையும் கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முன்னைய தினத்தினை தமிழ் பாடசாலைகளுக்கான விடுமுறை நாளாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
தமிழ் மாணவர்களும் ஆசிரியர்களும் தமது தீபாவளி கொண்டாட்டங்களுக்கான வேலைகளைச் செய்வதற்காக இவ் விசேட விடுமுறை வழங்கப்பட்டது. இருப்பினும் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் மனநிலைகளை புரிந்து கொள்ளாமலும் கல்வி அமைச்சின் விதிமுறைகளை மீறியும் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் விடுமறை தினத்தில் வழமையான பாடசாலை நாள் போன்று செயற்பட்டது.
இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதிபர் மேல் உள்ள அச்சம் காரணமாக பாடசாலைக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக மனரீதியாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இது தொடர்பில் பாடசாலை மாணவன் ஒருவர் கூறுகையில், நான் உடுப்பு எடுக்க வவுனியா நகரத்திற்கு அம்மாவோட செல்ல இருந்தன். ஆனால் பாடசாலை வராட்டால் அதிபர் அடிப்பார் என்ற பயத்தில பாடசாலை போனான். அதனால் நான் போகமுடியாது என்பதால் எனக்கு அம்மா தான் சேட் வாங்கிக் கொண்டு வந்தவா. எனக்கு அந்த சேட் அளவு இல்லை. இன்றைக்கு என்னுடைய தீபாவளி கொண்டாட்டம் எல்லாம் சரியாப் போச்சு என்றான் அந்த மாணவன்.
அப் பாடசாலைக்கு அதிபராக வரக் கூடிய தராதரம் இல்லாமலே குறித்த அதிபர் அரசியல் செல்வாக்கு காரணமாக அதிபராக நியமனம் பெற்றிருந்தார். தற்போது அதனைப் பயன்படுத்தியே தன்னிச்சையாக செயற்படுவதாக மாணவர்களும் ஆசிரியர்களும் கூறுகின்றனர் .
பிரச்சனைகள் தெரிந்தும் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனை மௌனம் காப்பது எமது சமூத்தின் அழிவிக்கே வழிவகுக்கும். என்பதுடன் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டிய பாடசாலைகள் தன்னிச்சையாக கட்டுப்பாடுகள் இன்றி செயற்படுமாக இருந்தால் எவ்வாறு நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியும்.
இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அவர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment