பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் இலங்கை விடயத்தை கையாண்ட முறை தவறானதாகும் - இந்தியா
இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச்சாட்டை பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் கையாண்ட முறையை இந்தியா கேள்விக்கு உள்ளாக்கி யதுடன், இவ்வாறான முறை தீங்கானது எனவும் இந்தியா கூறியுள்ளது. டெல்லியிலுள்ள அரசாங்க வட்டாரங்கள் கெமரூனின் அணுகுமுறையை நிராகரித்ததுடன், கெம ரூன் மாதிரி நாம் நடந்துகொள்ள மாட்டோம்' என அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் வெளிவிவகார அமைச்சர் பொதுநலவாய தலைவர்கள் உச்சிமாநாட் டுக்கு சென்றமை இலங்கை பற்றிய இந்தியாவின் அக்கறையின் வெளிப்பாடாகும் எனவும் இந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச்சாட்டை விசாரிக்க சுயாதீனமான ஒரு செயன்முறையை அமைக்க இலங்கைக்கு 4 மாத அவகாசம் வழங்கி இது நடைபெறாதுவிடின் இலங்கை ஐ.நா ஆதரவுடனான ஒரு சர்வதேச விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்குமென கெமரூன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கு பதிலளிக்கும் வகையில் "கண்னாடி வீட்டி லிருப்போர் கல்லெறியக் கூடாது" என கூறினார். 'இலங்கை இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க தேவையெனக் கருதும் காலத்தை எடுக்கும் எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.
2 comments :
Still they try to handle the situations of countries like sri lanka in a colonial way.The most saddest events during their regime still remain in our hearts
தமிழர்களிலும் ஒரு பகுதியினர் பிரித்தானிய அடிமைகள் மாதிரி தங்களை தாங்களே தாழ்த்தி கொள்வதால் டேவிட் கெமரூனுக்கு இலங்கை ஒரு அடிமைநாடு என்ற எண்ணம் வந்துவிடுகிறது.
Post a Comment