கவலைக்கிடமான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு காலமானார்
பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு சென்னையில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் காமெடி, குணச் சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் சிட்டிபாக்கு வயது 49.சிட்டி பாபுவுக்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்தது. இதற்காக அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த திங்கட் கிழமை திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை முகப் பேரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மூளையில் உண்டான கட்டி காரணமாக தொடர் சிகிச்சைக்கு பிறகும் அவரது உடல்நிலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். புதன்கிழமை மாலை முதலே அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து கோமா நிலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் நடிகர் சிட்டிபாபு இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
1 comments :
சிட்டிபாபு ஒரு நல்ல நகைச்சுவை நடிகர், திரைப்படங்களில் மட்டுமல்லாது , பல நல்ல நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியிலும் நடத்தி எங்களை மகிழ்வித்து இருக்கிறார். தனக்குப் பலவருத்தங்க்கள் இருந்தும், அதைக்காட்டிக் கொள்ளாமல் எங்கள் எல்லோரையும் மகிழ்வித்து இருக்கிறார். இவர் இவ்வளவு இளவயதிலே எம்மை விட்டுச் சென்றது எமக்கும், திரை உலகத்துக்கும் ஒரு பெரிய இழப்பு. இவர் ஆத்மாசாந்தியடைய வேண்டிக்கொண்டு, இவர் குடும்பத்துக்கு எமது அழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். VS. Drammen
Post a Comment