பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரரின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய அவரின் கள்ளக் காதலி உட்பட நால்வர் கைது!
பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரரின் படுகொலை சம்ப வத்தில் கள்ளக் காதலி உட்பட கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப் பட்டுள்ளனர். 21-07-2013ம் திகதியன்று கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் பொலிஸ் பரிசோதகரின் கள்ளக் காதலி, அவரது சாரதி, கொலையுடன் தொடர்புபட்ட கடுவல பகுதி நபர் உள்ளிட்ட நால்வரே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகர் 15 லட்சம் ரூபா ஒப்பந்த திட்டத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஒப்பந்த திட்டத்தை ஒப்படைத்தவர் பொலிஸ் பரிசோதகரின் கள்ளக் காதலி எனவும் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
முன்னாள் பொலிஸ் பரிசோதகரின் கள்ளக் காதலியான கொள்ளுபிட்டி பகுதியைச் சேர்ந்த ஹிமாலி கருணாரத்ன என்பவர் கோடீஸ்வரி எனவும் கோடீஸ்வர குடும்பத்தில் ஒரே பெண் பிள்ளை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். அடிக்கடி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதால் ஹிமாலி கருணாரத்ன, முன்னாள் பொலிஸ் பரிசோதகரான துசித குமாரசிறியை கொலை செய்ய திட்டம் தீட்டினார் என தெரியவந்துள்ளது.
21-07-2013ம் திகதியன்று கடத்தப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கித்துல்கல பொலிஸ் பிரிவில் கனேமல்ல பிரதேசத்தில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். 28-07-2013ம் திகதி கித்துல்கல பொலிஸாரால் அரவது சடலம் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நால்வரும் கடுவல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட வுள்ளதுடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment