Sunday, November 17, 2013

கூட்டமைப்பு எம்.பியும் பிரஜைகள் குழு காப்பாளரும் காலையில் ஆர்பாட்டம்: மாலையில் கூத்தாட்டம்!

இன்று(17) வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் காணாமல் போன உறவினர்களால் காலையில் இருந்து மதியம் வரை தீப்பந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இப் போராட்டத்தில் பங்கு பற்றி மக்களுக்கு உணர்ச்சிக் கருத்துக்களை வழமை போல் பேசித் தள்ளிவிட்டு தொடர் போராட்டங்களுக்கு அழைப்பு விட்டுவிட்டு அந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போராட்டம் முடிந்து முழுமையாக வீடு திரும்பிச் செல்வதற்கு முன்பதாகவே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், அவரது கைப்பிள்ளையும் பிரஜைகள் குழு காப்பாளருமான சண்னும் கூத்தாட்டம் ஒன்றில் இருந்து அதனை கைதட்டி ரசித்து ஆரவாரம் போட்டுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் இயங்கி வந்த லேடிஸ் பிற்றிங் சென்ரர் என்னும் உடற்பயிற்சி நிறுவனம் அரைகுறை ஆடைகளுடன் குலுக்கல் நடனங்களையும் பெசன் சோ நிகழ்வினையும் ஏற்பாடு செய்து தனது விளம்பரத்தை வவுனியா நகரசபை மண்டபத்தில் செய்தது. இதற்கு பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், கௌரவ விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர்களான ரி.லிங்கநாதன்,ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, பிரஜைகள் குழு காப்பாளர் சண் ஆகியோரை அழைத்திருந்தது.

இருப்பினும் தமிழ் மக்கள் கொட்டும் மழைக்கு மத்தியில் சொல்லொன்னத்துயரங்களை எதிர்கொண்டு வரும் நிலையிலும், காணாமல் போன உறவுகள் தமது பிள்ளைகளையும் சகோதரர்களையும் உறவுகளையும் தேடி உயிரை வெறுத்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான கூத்தாட்டம் தேவை தானா என மக்களால் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் முழுமையாக இந்த நிகழ்வை புறக்கணித்து எமது கலாசாரத்தை பாதுகாத்தனர்.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆகந்தனும் கைப்பிள்ளை சண்னும் இன்று பிரஜைகள் குழுவின் பேரில் போராட்டம் ஒன்றினை காணாமல் போனவர்களை கொண்டு நடத்திவிட்டு அந்த மக்கள் வீடு போகும் முன்னர் கூத்தாட்டத்திற்கு சென்று முன்வரிசையில் இடம்பிடித்து குலுக்கல்களை பார்த்தார்களாம். பத்தாதற்கு இப்படியான குழுக்கள் நிகழ்வுகள் எமது மக்களுக்கு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

முற்று முழுதாக மேலைத்தேச மற்றும் சிங்கள காலாசாரத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகள் தேவையாம் எனக் கூறும் இவர்களால் எமது மக்களுக்கு என்ன விமோசனம் கிடைக்கப் போகிறது.

1 comments :

Anonymous ,  November 17, 2013 at 9:19 PM  

TNA party is only for advicing to public,be a heeros,holding a parliment seats,brein washing a tamil yoths,getting a funds from diaspoora tamils,have a dinner with Sri Lankan Government topp leadesrs,get good fasilitys with good life with a personal secretterys, enjoys at night clubs (like LTTE Tamil Chelvans night shopping at Thailand due to Anton Balasingam) and meke Tamiliens to be mad! (like, when David Camaroon came to Jaffna fewe days ago)

This is duty of TNA,Those all are Tamils develops! Good luck for tamils,TNA and there TAMIL EALAM.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com