Friday, November 29, 2013

இலங்கை உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்யக் கூடாது-சீனா!

இலங்கை அரசாங்கமும், அதன் மக்களும் உள்விவகாரப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளக் கூடிய ஆற்றலும் வல்லமையும் கொண்டவர்கள் எனவே இலங்கை உள்விவகாரங்களில் வெளிச் சக்திகள் தலையீடு செய்யக் கூடாது என சீனா அறிவித்துள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கத்தின் உரிமைகளுக்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்க வேண்டுமென்பதுடன் மனித உரிமை மேம்பாடு தொடர்பில் இலங்கை மக்கள் தீர்மானத்தை எடுக்க வேண்டுமென்பதுடன் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் மனித உரிமை விவகாரங்களை உலக நாடுகள் அணுக வேண்டுமென சீனா தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாது எமது நாட்டின் உள்விவகாரங்களில் சர்வதேச சமூகம் அரசியல் நோக்கத்திற்காகவோ அல்லது இரட்டை நிலைப்பாட்டுடனோ தலையீடு செய்வதனை ஏற்க முடியாது என்பதுடன் மனித உரிமை விவகாரத்தை ஒர் கருவியாகப் பயன்படுத்தி நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. Correct!

    Otherwice, Sri Lankan Goverment also, can involve British Internal matters and Tamil Naadu Politiciens Matters Too.

    Thay should shut up!

    ReplyDelete