வட மாகாண சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மனோதத்துவ பாடநெறி!
வட மாகாண சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களு க்கான மனோதத்துவ டிப்ளோமா பாடநெறியொன்று நேற்று ஆரம்பமாகியது. வட மாகாணத்தில் பணியாற்றும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சை சேர்ந்த அதிகாரிகளுக்கு மனோ தத்துவ ஆலோசனை தொடர்பான ஒரு வருட டிப்ளோமா பாடநெறியொன்றை அறிமுகப்படு த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ் மொழி மூலம் இவ்வாறான பாடநெறியொன்று ஆரம்பிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். வட மாகாணத்தை அடிப்படையாக வைத்து யாழ்ப்பா ணத்தில் நடைபெறும் இப்பாட நெறியின் ஆரம்ப வைபவம் நல்லூர் பிரதேச செயலகத்தில் இன்று நடைபெறுகின்றது.வட மாகாண பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் உரிமை மற்றும் மகளிர் அபிவிருத்தி அதிகாரிகள், உதவி ஆலோசனை அதிகாரிகள் ஆகியோர் இப்பாட நெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள் ளனர். இவர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர்.அரசாங்கம் இதற்காக 7.5 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது.
0 comments :
Post a Comment