அரசாங்கத்தின் வரவு - செலவுத்திட்டத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி. இன்று கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்ளவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களும் கலந்துகொண்டு அரசாங்கத்திற்கு எதிராகப் போராட முன்வர வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரசார செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பாக விஜித ஹேரத் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள 2014ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத்திட்டமானது முழுவதும் அரசாங்கத்தினருக்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ளது. அப்பாவி மக்களின் பணத்தை சூறையாடி ஜனாதிபதி குடும்பத்தினர் குளிர் காயும் வகையில் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டுள்ள ஒரு வரவு- செலவுத்திட்டமே இதுவாகும்.
பொதுநலவாய உச்சி மாநாட்டின் முன்னரே படித்த மக்கள் அரசாங்கத்தின் திட்டத்தினை உணர்ந்து விட்டனர். கோடிக்கணக்கில் பணத்தினை செலவழித்து உச்சி மாநாட்டினை நடாத்தி முடித்த பின்னர் மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் அதிகரித்துவிட்டது. இந்நிலை இத்தோடு நிற்கப் போவதில்லை. இந்த ஆட்சி நிறைவடையும் வரை நாட்டில் வரி அதிகரிப்பும் விலையேற்றமுமே அதிகரிக்கும்.
மக்கள் தமது அன்றாட வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்ய முடியாத நிலையில் தமக்கான சம்பள உயர்வினை அதிகரிக்கக் கோரும் நிலையில் ஜனாதிபதி அவற்றினை கவனத்திற் கொள்ளாது ஒரு தனிப்பட்ட சலுகைகளுக்கான ஒரு சில நபர்களுக்கானதொரு வரவு- செலவுத் திட்டத்தினை கொண்டு வந்துள்ளனர்.
அரச ஊழியர்களின் கருத்தைக் கவனிக்காது 1200 ரூபாய் சம்பள உயர்வினை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. ஆனால், மறுபுறத்தில் இரட்டிப்பு வரி அறவீட்டினை செய்து அச்சம்பள உயர்வினை விடவும் இருமடங்கு செலவினை ஜனாதிபதி திட்டமிட்டு செய்துவிட்டார்.
எனவே, இந்த அராஜக அரசாங்கத்தினையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியினையும் கண்டித்தும் முக்கியமாக இந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டத்தினை எதிர்த்து நாம் இன்று பாரியதொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை நடத்தவுள்ளோம்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு புஞ்சி பொரளை சந்தியில் இருந்து ஆர்ப்பாட்டப் பேரணியினை ஆரம்பித்து ஹைட்பார்க் மைதானம் வரையில் ஊர்வலமாக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Ritual exercises as usual cannot promote your party:duty of the opposition is to oppose and not to obstruct always
ReplyDelete