புற்றுநோய் கட்டிகளை அகற்றி சாதனை - பதுளையில் சம்பவம்!
புற்று நோயினால் பீடிக்கப் பட்ட பெண்ணுக்கு மேற்கொள் ளப்பட்ட சந்திர சிகிச்சையின் போது இரு கட்டிகளும் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. இக்கட்டிகள் அகற்றப்பட் டமை இலங்கையில் இதுவே முதல் முறையென்று பதுளை புற்று நோயியல் வைத்திய நிபுணர் அனுருத்த தெரிவித்தார்.பதுளை புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணொருவருக்கு இரு மணித்தி யாலங்களாக மேற்கொள் ளப்பட்ட சத்திர சிகிச்சை பூரணமாக வெற்றியளித்துள்ளது. ஈரல் மற்றும் மலவாயில் ஆகிய இரு இடங்களிலேயே மேற்படி புற்று நோய் பீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதுளை புற்று நோயியல் வைத்திய நிபுணர் அனுருத்த தேவப்பெரும கருத்துத் தெரிவிக்கையில், 'இலங்கையில் வைத்திய வரலாற்றில் மேற்படி சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தினம் (26) மிக முக்கியமான நாளாகும்.இச்சத்திர சிகிச்சை மூலம் 200 மில்லி மீற்றர் இரத்தமே வெளியேறியது.என்னால் மேற்கொள்ளப்பட்ட வைத்திய சிகிச்சை முறைமை இலங்கையில் செய்வதில்லை. மிக மிக எச்சரிக்கையாகவும் நிதானத்துடனும், இத்தகைய சத்திர சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட வேண்டியதாகும்.சத்திர சிகிச்சையின் பின்னர் அப்பெண் சுகதேகியாகயுள்ளார்.
0 comments :
Post a Comment