Tuesday, November 26, 2013

பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிக்க ஐக்கியம் முக்கியம்! எவரது விமர்சனமும் இலங்கைக்கு அவசியமில்லை! கோட்டபாய

பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழித்து கட்டுவதற்கு உலகெ ங்கும் வாழும் அனைத்து மக்களும் ஐக்கியத்துடன் செயற் பட வேண்டும் என பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபகஷ தெரிவித்துள்ளார். பாது காப்பு அமைச்சின் பணிப்புரைக்கமைய இலங்கை கடற் படை வருடாந்தம் ஏற்பாடு செய்யும் காலி கலந்துரை யாடல் 2013 சர்வதேச கடல் பாதுகாப்பு கருத்தரங்கை காலி லைட் ஹவுஸ் ஹோட்டலில் அங்குரார்ப்பணம் செய்து உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் இதனை தெரிவித்தார்.

சர்வதேச கடல் பாதுகாப்பு கருத்தரங்கில் 35 நாடுகளின் கடல்சார் நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் எனும் தொனி பொருளில் இடம்பெறும் இந்த பாதுகாப்பு மாநாட்டின் முதல் அமர்வு உரையை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க நிகழ்த்தினார்.

அங்குரார்ப்பண நிகழ்வின் பிரதான உரையை பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமை ச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபகஷ நிகழ்த்தினார். சில நாடுகள் பயங்கரவாதத் திற்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாது என தெரிவித்தார். பயங்கரவாதத்தை உலகிலிருந்து பூண்டோடு ஒழித்து கட்டுவத ற்கு ஐக்கியத்துடன் செயற்படுவது இன்றியமையாத விடயம் என சர்வதேச கடல்சார் மற்றும் நகர விவகாரங்களுக்கான நிபுணர்கள் மத்தியில் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழித்து கட்டிய இலங்கை தற்போது அபிவிருத்தி பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் எவரது விமர்சனமும் இலங்கைக்கு அவசியமில்லை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபகஷ தெரி வித்தார். கடல் மார்க்கமாக ஏனைய நாடுகளுக்கு அனுமதியின்றி பிரவேசிப்பது. கடல் எல்லைகளை மீறுவது மற்றும் கடற்கொள்ளைகள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.

1 comments :

Anonymous ,  November 26, 2013 at 9:22 PM  

Very very succesfully conferance,which is 100% valid for Asian Countries. This kind of activitets from governments are importanat for a hold terrorism out.

This kind of conferances are very very important for Asia.

See what happening in USA? There are all security prosess are on scanning and thay have a controll of the names, colours, nationalities and ect.

Why, should Asia come on the same scale??

Nice and important meeting for Asia! Good and keep it up!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com