பிரபாகரனின் தனிப்பட்ட பணியாளராக இருந்த ஒருவருக்கு கடூழியச் சிறைத் தண்டனை விதித்தது கொழும்பு மேல் நீதி மன்றம்!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட உதவியாளராக பணி புரிந்த தனபாலசிங்கம் லிங்கதாசன் என்ற இந்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க, இரண்டு மாத கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
குறித்த நபர் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்து, துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் இராணுவ தந்திரோபாயங்கள் பற்றிய பயிற்சிகளை பெற்றவர் என நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு நீதிபதி இந்த தண்டனையை வழங்கினார்.
0 comments :
Post a Comment