Wednesday, November 13, 2013

வவுனியாவில் குடும்பப்பெண்மீது வாள் வெட்டு!

வவுனியா புளியங்குள பொலிஸ் பிரிவிக்குட்பட்ட புதூர் சந்திப்பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் திருட்டு சம் பவம் ஒன்று 12.11.2013 இரவு 11.40 மணியளவில் நிகழ் ந்துள்ளது. சின்னதம்பி தவராசா வயது 63 தவராசா பத்மாவதி வயது 51 எனற இரண்டு நபர்களும் வசித்து வந்த வீட்டில் இனம் தெரியாதவாறு முகமூடி அணிந்து, நடந்து வந்த மூன்று நபர்கள் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட் டுள்ளார்கள்.

கொள்ளைச்சம்பவத்தில் தம்பிராசாவின் அரை பவுண் மோதிரத்தையும் ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியையும் திருடிவிட்டு தவராசாவை வாளால் வெட்டபோனவேளை மனைவி தடுத்தபோது மனைவியின் கை வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்களின் பிள்ளைகள் இருவரும் அவுஸ்ரேலியாவில் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com