இலங்கை அரச ஒலிம்பிக் பிரதிநிதிகளுடன் சர்வதேச ஒலிம்பிக் குழுவினர் சந்திப்பு
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையிலான இலங்சை அரச பிரதிநிதிகள் குழுவினரை லெளசேன் நகரில் சர்வதேச ஒலிம்பிக் குழு பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.இலங்கையில் 1973இல் அமுல்படுத்தப்பட்ட விளையாட்டுத்துறை சட்ட விதிகளில் நிலவும் நீண்டகால சிக்கல்களைத் தீர்க்கும் பொருட்டு இந்த சந்திப்பு நேற்றுமுன்தினம் நடைபெற்றதாக சர்வதேச ஒலிம்பிக் குழு வின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் பிரதிநிதிகள், கோடைக்கால ஒலிம்பிக் சர்வதேச சம்மேளனத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள்இ தேசிய ஒலிம்பிக் குழுக்களின் சங்கப் பிரதிநிதிகள், ஆசிய ஒலிம்பிக் பேரவையின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விளையாட்டுத்துறை அமைச்சர் முன்வைத்த தெளிவானதும் உறுதியுமான அணுகுமுறைகளையும் நல்லெண்ண நோக்குகுடனான கருத்துக்களையும் கலந்துரை யாடல்களில் கலந்துகொண்ட அனைவரும் வரவேற்றனர். ஒரு பொது இணக்கப்பாட்டைக் காணும் வகையில் நடத்தப்பட்ட இந்த சந்திப்பின்போது சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இதன் பிரகாரம் சட்டதிட்டங்கள் ஆறு மாதங்களுக்குள் திருத்தி அமைக்க ப்பட வேண்டும் எனவும் அதுவரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தேர்தலை நடத்துவதில்லை எனவும் தீர்மானிக் கப்பட்டுள்ளது. அது வரை தற்போதைய நிருவாகிகள் சபை தொடர்ந்து பதவியில் இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment