Friday, November 15, 2013

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விக்கியையும், சம்பந்தனையும் இன்று மாலை சந்தித்தார்!!

யாழிற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று பிற்பகல் யாழ். பொது நூலகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடினார். வடக்கிற்கு விஜயம் செய்து மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பது மகிழ்ச்சி அளிப்பதாக வடக்கு அரசியல் தலைவர்கள் தன்னிடம் கூறியதாக டேவிட் கமரூன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து யாழ். பத்திரிகை அலுவலகம் ஒன்றுக்குச் சென்ற பிரித்தானிய பிரதமர் அங்கு ஊழியர்கள் மற்றும் பிரதானியுடன் கலந்துரையாடிய பின் வலிகாமம் வடக்கு பகுதிக்கு விஜயம் செய்தார். பிரித்தானியப் பிதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரனுடனும் சந்திப்பில் ஈடுப்பட்டிருந்த வேளை, நூலகத்திற்கு வெளியே கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. இதன்போது, காணமல் போன தமது உறவுகளின் நிலையை கண்டறிந்து தருமாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்

2 comments :

Anonymous ,  November 15, 2013 at 5:38 PM  

Everything a kind of publicity.Tamil VIPs may have involed with the usual gossip,what they normally do with the strangers.We have a bundle of experiences,finally what they achieve only developing the gossip culture

Anonymous ,  November 16, 2013 at 2:59 AM  

தமிழ் தலைவர்கள், அரசியல் மேதாவிகள், அறிவுக்கொழுந்துகள், புலன் கூடியவர்கள்..
அறிவுபூர்வமான, ஆக்கபூர்வமான, தூரநோக்கு கொண்டு நடந்திருந்தால்,.........

ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு எப்போதோ ஒரு காந்திரமான, திடமான முடிவை எட்டியிருக்கலாம்.

ஆனால், விட்டார்களா? ..
அல்லது சிந்தித்து நடந்தார்களா?.....

ஆனால், இன்றும் அதே தவறுகளை செய்துகொண்டு கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்.

எனவே எவர் வந்து போனாலும் , தமிழர் தமது குறுகிய மனநிலையிலிருந்து விடுபடாவிடத்து
எதுவுமே நடக்கப்போவதில்லை.

அப்பாவி மக்கள் நிலை பரிதாபம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com