Wednesday, November 13, 2013

இலங்கைக்கு எதிரான சூழ்ச்சியின் பங்காளர்கள் யார் என்பது, முழு நாட்டுக்கும் அம்பலமாகியுள்ளது!

தாயகத்திற்கெதிரான சூழ்ச்சியின் பங்காளர்கள் யார் என்பது, முழு நாட்டுக்கும் அம்பலமாகி யுள்ளது. உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி, நாட்டை தாரைவார்க்கும் பெரும் சூழ்ச்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிலிருந்து முன்னெடுக்கப்படுகிறது. பொதுநலவாய அரச தலைவ ர்கள் மாநாட்டை இலக்காக கொண்டு, இந்த மிகப் பெரிய தாரைவார்ப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் மங்கள சமரவீர, நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகளின் சூத்திரதாரியாக இருந்து செயற்படுவதாக, நேற்று சிறிகொத்தவுடன் தொடர்புடைய "ஜாதிக சேவக சங்கமய" வின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிரூபிக்கப்பட் டது.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பு என கூறி, சமகி பலவேகய எனும் நாட்டுக்கு எதிரான சக்திகள், இவ்வூடகவியலாளர் சந்திப்பிற்கு இலங்கைக்கு வருகை தந்து ள்ள செனல் 4 அலைவரிசையின் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்தமை ஊடாக, இந்த சூழ்ச்சியின் பின்னணி அம்பலமாகியுள்ளது.

இந்த ஊடகவியலாளர்களின் சந்திப்பினால், மங்கள சமரவீரவுடன், விக்ரமபாகு கருணாரட்னவும், நாட்டுக்கு எதிராக செயற்படும் என்ஜிஓ வலையமைப்பின் உறுப்பினரான பிரிட்டோ பெர்னாண்டோவும், சில காலம் ஊடகவியலாளராக செயற்பட்டு, தேசிய பட்டியலில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பின ரானதன் பின்னர், நாட்டை விட்டு வெளியேறி, அமெரிக்காவில் வாழ்ந்து, மீண்டும் இலங்கைக்கு வருகை தந்துள்ள தினேஷ் தொடங்கொட என்பவரும், இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஊடகவியலாளர் சந்திப்பில், மங்கள சமரவீர, விக்ரமபாகு கருணாரட்ன, பிரிட்டோ பெர்னாண்டோ ஆகியவர்களின் அடிப்படை நோக்கமாக அமைந்தது, மனிதாபிமான நடவடிக்கைகளின்போது, ராணுவ வீரர்கள் யுத்த குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக பொய்யான செய்திகளை பரப்பி, அதனை செனல் 4 ஊடாக உலகிற்கு வழங்குவதே, இவர்களது நோக்கமாகும்.

நாட்டை அழித்த எல்ரிரிஈ யினரின் தேச பக்தர்களாக காட்டுவதற்கும், விக்ரமபாகு கருணாரட்ன மற்றும் பிரிட்டோ பெர்னாண்டோ ஆகியோர், தொடர்ந்தும் வாதிட் டதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. உள்ளுர் ஊடகவியலாளர்கள் அவர்களின் சில கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அவர்கள் முழுவ திலும், சனல் 4 விற்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் தேவையான வகையில் கருத்துகளை வெளியிட்டனர்.

நாட்டுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க மாநாடு நடைபெறும் சந்தர்ப்பத்தில், பல இராஜதந்திரிகள் இலங்கைக்க வருகை தந்துள்ள நிலையில், மங்கள சமரவீர தலைமையிலான நாட்டுக்கு எதிரான சூழ்ச்சி க்காரர்களின் செயற்பாடுகளுக்கு, கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த சூழ்ச்சிதாரிகள், அடுத்த சில நாட்களில் பொதுநவலவாய அரசதலைவர்கள் மா நாட்டை இலக்காக கொண்டு, நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என, புலனாய்வு பிரிவிற்கு தகவல்கள் கிடைத் துள்ளன.

3 comments :

Anonymous ,  November 13, 2013 at 11:18 AM  

Their actions are betrayal of trust to the country.How do we say are they lovers of our country.Never,they have been beeen betraying state secrets to the out side world time to time.Specially the mojority singhlese must have an eye on these betrayers.They may make enough damages to the country for the small concessions what they get

Anonymous ,  November 13, 2013 at 11:30 AM  

History reveals how the Kandyan kingdom surrendered to the British because of Ehelappola, King of Panchalamkuruchchi Kaddappomman surrendered to the British
because Eddappan played a key role.
These games always continues in history.

Anonymous ,  November 13, 2013 at 10:05 PM  

People should not go behind these betrayers please do kick them off from the political arena.This what you can do it to your country.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com