Monday, November 25, 2013

சட்டத்தை நிலைநாட்டச் சென்ற பொலிஸ் அதிகாரியை கடித்துக் குதறிய நபர்!

சட்டத்தை நிலைநாட்டடுவது பொலிஸாரின் கடமையாகும். அந்த வகையில் நீதிமன்ற பிடியாணையின் பேரில் தேடப் பட்டுவந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்யச் சென்ற வேளை அச்சந்தேக நபர் பொலிஸ் அதிகாரியை பாய் ந்து கடித்துள்ளார். முகத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி நிக்கவரட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெறு கிறார்.

நிக்கவரட்டிய பிரதே சத்தின் கேடியான மேற்படி நபர் பல்வேறு குற்றச்சாட்டு களுக்காக தேடப்பட்டுவந்தார். இந்நபர் பற்றிய தகவல் பொலிஸாருக்குக் கிடைத் ததையடுத்து சந்தேகநபரை கைது செய்யச்சென்ற வேளையிலேயே பொலிஸாரி டமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பொலிஸ் அதிகாரியின் முகத்தை கடித்துக் குதறிவிட்டு அவர் தப்பிக்க முயன்றுள்ளார்.

எனினும் சமயோசிதமாக செயல்பட்ட ஏனைய பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இந் நபர்முன்னர் ஒரு தடவை நீதிமன்ற கூண்டில் வைத்து கிருமிநாசினி அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. This proves still cannibals exist.The maximum civilization slowly changing into cannibalism.

    ReplyDelete