ஐதேகவின் முன்னாள் உறுப்பினர் கஞ்சா வியாபாரம் செய்கையில் மாட்டிக்கொண்டாரே!
ராஜாங்கன பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கஞ்சா வியாபாரம் மற்றும் விநியோகம் செய்துகொண்டிருக்கையில் கைதுசெய்யப்ப ட்டதாக ராஜாங்கன பொலிஸார் தெரிவித்தனர். விற்பதற் காக ஒரு கிலோவும் நூறு கிராம் கஞ்சாவை அவர் ராஜாங்கன யாய - 10 பிரதேசத்து வீடொன்றில் வைத்திருந்த போதே பொலிஸார் கைது செய்ததாகக் குறிப்பிட்டனர்.
மிகவும் சூட்சுமமான முறையில் குறித்த நபர் கஞ்சா வியாபாரத்தை பல ஆண்டுகளாக நடாத்திவந்தமை பொலிஸாரின் விசாரணைகளினால் தெரியவந்து ள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment