இரு நாட்டு தலைவர்கள் வருகையால் இன்று சில வீதிகள் மூடப்படும் - பொலிஸார் அறிவித்தல்!
பொதுநலவாய அரசதலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள் வதற்காக மலாவி மற்றும் பாபடோஸ் ஆகிய நாடுகளின் அரசதலைவர்கள் இன்று இலங்கைக்கு வருகை தர வுள்ளனர்.இவர்களின் வருகையை முன்னிட்டு இன்று பகல் 12.45 தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி உள்ளிட்ட கொழும்பின் மேலும் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
இதற்கமைய பேலியகொடையிலிருந்து பேஸ்லைன் வீதியின் பொரளை பொது மயான சுற்றுவட்டம் வரையும் அங்கிருந்து பம்பலப்பிட்டி சந்தி வரை பௌத்தாலோக்க மாவத்தையும் குறித்த காலப் பகுதியில் மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
இதனைத் தவிர பம்பலப்பிட்டி சந்தியில் இருந்து பழைய பாராளுமன்ற சுற்று வட்டம் வரை காலி வீதியும் குறித்த காலப் பகுதியில் மூடப் படவுள்ளது.வீதிகள் மூடப்படவுள்ள காலப் பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதியே அதிகளவிலான அரச தலைவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித் துள்ளார்.இதனால் அன்றைய தினத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.14ஆம் திகதி காலை 8.15 இல் இருந்து மாலை 6.30 வரை அவ்வப்போது சில வீதிகளூடான வாகன போக்குவரத்தை மட்டுப்படுத்த நேரிடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment