Saturday, November 16, 2013

சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப்பட மாட்டாது - கமரூனின் கோரிக்கையை நிராகரிக்கிறார் பஸில்!

இலங்கையின் இறுதிக் கட்டப் போரின்போது, நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது.

ஜனாதிதபி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ அவ்வாறான விசாரணைக்குஇடமளிக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளார்.

இலங்கை மீதான குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் சுயாதீன விசாரணையொன்றை நடாத்த வேண்டுமென்று பிரித்தானியப் பிரதமர் கமரூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அவ்வாறான விசாரணைப் பொறிமுறையொன்று அமைக்கப்படாவிட்டால், சர்வதேச விசாரணையை நடாத்துமாறு ஐநாவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் கமரூன் காலக்கெடு விடுத்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்றுவரும் பொதுநலவாய தலைவர்களின் உச்சிமாநாட்டின்போது, வடக்கே யாழ்ப்பாணம் சென்று தமிழ்த் தலைவர்களைச் சந்தித்து நாடுதிரும்பியுள்ள பிரித்தானியப் பிரதமர் நேற்று (15) வெள்ளிக்கிழமை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடாத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. இலங்கையிலை நடந்தவைக்கு நீங்கள் சர்வதேச நீதிமன்று வேண்டுமென்றால் ஆப்பாகானிஸ்தான் ஈராக் சிரியா என்று நீங்கள் செய்த கொலைககளுக்கு எங்க விசாரணை செய்யிறது என்று சொல்லவேணுமெல்லோ

    ReplyDelete
  2. Human rights violation being carried out systematically around the world Syria,Afghanistan,Libya Iraq and pakistan.We know who are the cause of these unimaginable amount of human rights violations.This is something like a proverb."When the priester does a wrong thing it doesn't matter
    the others should not do" Kurukkal seithaal kuttamillai"

    ReplyDelete
  3. well done hon. minister

    ReplyDelete
  4. தமிழ் தலைவர்கள், அரசியல் மேதாவிகள், அறிவுக்கொழுந்துகள், புலன் கூடியவர்கள்..
    அறிவுபூர்வமான, ஆக்கபூர்வமான, தூரநோக்கு கொண்டு நடந்திருந்தால்,.........

    ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு எப்போதோ ஒரு காந்திரமான முடிவை எட்டியிருக்கலாம்.

    ஆனால், விட்டார்களா? ..
    அல்லது சிந்தித்து நடந்தார்களா?.....

    இன்றும் அதே தவறுகளை செய்துகொண்டு கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்.

    தமிழர் அரசியலில் மிகவும் பின்தங்கியுள்ளார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகிவிட்டது.

    ReplyDelete
  5. British president David Camaron and his media Group including channel 4 is criminels and thay all have been in Sri Lanka for LTTE UK DIASPORAS TIMETABLE ONLY, where TNA ALL TAMIL POLITICIENS done arrangements.

    those all criminels,where thay using innocent Tamil Peoples for therewellnesses .

    IDIOT TAMILS IN NORTH SRI LANKA.

    CLEVER TNE, WHERE SAMPANTHAN LEFT ON BACK DOOR, CLEVER UK PRESIDENT, CLEVER CHANNEL 4 AND MUCH CLEVER IS MR.MAHINDA ONLY.

    WORLD OVER KNOWS,HOW LONG UK PRESIDENT DAVID CAMAROON HAS BEEN IN SRI LANKA, WHAT KIND OF POWER HE HAVE TO DO LIKE THOSE THINKS, WHY CHANNEL 4 HAS BEEN IN THERE LIKE THIEFS ETC.

    ReplyDelete
  6. It is a big question why the government has to face the Int inquiry,who will represent the armed group who made atrocities and the IPKF's atrocities in the north are unforgettable.Do you think that you need an inquiry for this too.if so who will represent.

    ReplyDelete