Tuesday, November 5, 2013

அதிகாலையில் கத்தியுடன் திரிந்ததால் விளக்கமறியலில் வைத்தார் மல்லாகம் நீதிபதி

யாழ்.புத்தூர் பகுதியில் கிறிஸ் கத்தியுடன் அதிகாலையில் நடமாடிய இருவரும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.புத்தூர் பகுதியில் கிறிஸ் கத்தியுடன் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடமாடிய இருவரை அந்த பகுதியில் ரோந்து சென்ற அச்சுவேலி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவ்விருவரையும் நீதவான் பசீர் முஹமட் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com