இளம் பெண் சட்டத்தரணிக்கு முத்தம் கொடுத்த ஹோட்டல் சிப்பந்தி கைது!
இளம் பெண் சட்டத்தரணி ஒருவரின் இடையில் முத்தம் கொடுத்த ஒரு பிள்ளையின் தந்தையான ஹோட்டல் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதா வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக சட்டத்தரணி பொலிஸ்நிலையத்தில் கொடுத்த வாக்கு மூலத்தில் சம்பவ தினம் தான் தன்னுடைய வீட்டில் இருந்த படி உறவினர் ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசியின் ஊடாக உரையாடிக்கொண்டிருந்தபோது சந்தேக பின்பக்கத்தால் வந்து தன்னுடைய இடையில் முத்தமிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தாம் இவருடைய நடவடிக்கையை பார்த்து பயந்து கூச்சலிடவே சந்தேக நபர் தப்பிச் சென்றுவிட்டார் என வெலிகமை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யதார்.
இதனை தொடர்ந்து பொலிஸ் இன்ஸ்பெக்டர் பத்ரடி. காலிங்க தலைமையிலான பொலிஸ் கோஷ்டி சந்தேக நபரான ஹோட்டல் ஊழியரை கைது செய்ததுடன் இன்றையதினம் மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment