சியாம் கொலை வழக்கு சாட்சியங்களுக்கு வாஸின் குடும்பம்தான் மிரட்டல் விடுத்தனர்! உறுதி செய்தனர் CID!
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழ க்கின் சாட்சியங்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் தொலை பேசி அழைப்புகள், முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ்குணவர்த்தன மற்றும் ரவிந்து குண வர்த்தனவின் உறவினர்களின் தொலைபேசிகளிலிருந்து வந்ததென தொலைபேசி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன என்று, கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கொழும்பு நீதவான் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
தினேஷ் சுஷந்த குறே மற்றும் தரங்க சஞ்சீவ ஆகிய சாட்சியங்களுக்கு வாஸ் குணவர்த்தனவின் உறவினர்களும், நண்பர்களுமான தினுஷா வாஸ் குணவர்த்தன, சனத் குமார ஆகியோரின் தொலைபேசிகள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபயசேகர கூறினார்.
இந்த மிரட்டல் அழைப்புகளை செய்தவர்களுக்கு எதிராக நுகேகொட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கின் பிரதான சந்தேக நபரை சட்டமா அதிபர், அரச தரப்பு சாட்சியாக்கி விடுதலை செய்துள்ளதால் நீதியான ஒரு விசாரணை நடத்த முடியாதெனவும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment