சிறுவனை சிறுநீர் கழிக்க முடியாமல் செய்த சேவலங்கா நிறுவனப் பிக்கு வவுனியாவில் கைது
வவுனியாவில் சிறுவன் ஒருவனை சிறுநீர் கழிக்க முடியாதளவுக்குச் செய்த சேவா லங்கா நிறுவனத்தின் ஆலோசகரும் வடமாகாணத்தின் இரண்டாம் நிலைப் பௌத்த பிக்குவான கல்யாண திஸ்ஸ தேரர் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா அட்டமஸ்கட பகுதியில் இயங்கி வந்த சிறுவர் இல்லத்தில் குறித்த கல்யாணதிஸ்ஸ என்ற விகாராதிபதியினால் சிறுவர் துஸ்பிரயோகம் மேற்காள்ளப்பட்டதாக சிறுவன் ஒருவன் கொடுத்த மனு மீதான விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் இன்று (06) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து விகாரதிபதிக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறுநீர் கழிக்க முடியாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட சிறுவன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், 22 சிறுவர்களை தேசிய அதிகார சபையினர் பொறுப்பேற்று மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு அழைத்துச் சென்றிருந்தனர்.
இந் நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்புச் சபையால் ஆறு சிறுவர்கள் நீதி மன்றில் ஆயர் படுத்தப்பட்டு அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணித்ததுடன், அட்டமஸ்கட விகாரதிபதி கல்யாணதேரரை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, இங்கு இருந்த பல சிறுவர்கள் காணாமல் போயிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இச் சிறுவர் இல்லத்தில் 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் முறையே 82, 62 சிறுவர்கள் இருந்துள்ளனர். இவர்களில் தற்போது 22 சிறுவர்களே மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment