Friday, November 22, 2013

நாகப் பாம்பால் இளம் பெண்ணின் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்.........

மொனராகலை மாவட்டம் வெல்லவ பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் பெரிய நாகப் பாம்பு ஒன்றிடம் வசப்பட்டு ள்ளதால் அவரது குடும்ப வாழ்க்கை நெருக்கடிக்குள் சிக்கி யுள்ளது.வெல்லவ ஹேரத்கம என்ற பிரதேசத்தில் திரு மணமான 30 வயதான பெண்ணுடன் பெரிய நாகப் பாம்பு நட்புடன் பழகி வருவதுடன் அந்த பெண்ணை தினமும் பின் தொடர்ந்து வருகிறது.இதனால் பெண்ணின் வீட்டில் தகராறு ஏற்பட்டு, வெல்லவ பொலிஸ் நிலையத்தில் முறைப் பாடும் செய்யப்பட்டுள்ளது.பெண்ணை பின் தொடர்ந்தும் வரும் இந்த பாம்பு இரவில் அந்த பெண்ணின் அறைக்குள் புகுந்து கொள்வதோடு வெளியில் செல்வதில்லை.

உயிரிழந்த உறவினர் ஒருவர் நாகப் பாம்பாக பிறந்துள்ளதாக நம்பும் இந்த பெண் தான் உறங்கும் கட்டிலுக்கு அருகில் நாகம் படுப்பதற்காக பெட்டியை ஒன்றையும் வைத்துள்ளார்.வீட்டில் நாகப் பாம்பு இருப்பதால் பெண்ணின் கணவரும் பிள்ளைகளும் இரவில் வீ்ட்டுக்கு வெளியில் நித்திரை செய்கின்றனர்.பெண்ணுக்கு எவரும் தீங்கிழைக்க நாகப் பாம்பு இடமளிப்பதில்லை எனவும் நாகத்தை அடிக்கவோ அதனை துன்புறுத்தவோ பெண் இடமளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து நேற்று வெல்லவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய ப்பட்டிருந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com