ஒரே சூலில் மூன்று குழந்தைகள்; மட்டக்களப்பு வைத்தியசாலையில் சம்பவம்!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாயொருவர் ஒரே சூலில் மூன்று குழந்தைகளை பிரசவித் துள்ளார். இம்மூன்று குழந்தைகளையும் குறித்த தாய் நேற்று வியாழக்கிழமை பிரசவித்ததாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முருகா னந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழூர் பிரதேசத்தைச் சேர் ந்த இராஜேந்திரன் சபேஸ்கலா எனும் தாயே மூன்று குழந்தைகளையும் பிரசவித்துள்ளார். இம் மூன்று குழந்தைகளும் பெண் குழந்தைகள் எனவும் இக்குழந்தைகள் மற்றும் தாய் தேக ஆரோக்கியத்துடன் காணப்படு வதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முருகானந்தன் மேலும் தெரிவித்தார்.
கடந்த மாதமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிரசவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment