Wednesday, November 13, 2013

கடவுள் கனவில் வந்து கூறிய செய்தி நிஜத்தில் தோன்றிய அதிசயம்! (படங்கள் இணைப்பு)

அம்பாறை கல்முனை பிரதேசத்தில் மாமாங்கப் பிள்ளை யார் ஆலயத்திற்கு அருகாமையில் திடீரெனத் தோன்றிய தெய்வச்சிலையை பார்வையிட இராணுவத்தினர் படையெ டுத்துள்ளனர். குறித்த ஆலயத்தில் அம்மன் விக்கிரகம், திரிசூலம், இரண்டு தகடு களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இப்பிரதேசத்தில் வாழும் ஒருவரின் கனவில் தேன்றிய செய்தியினால், அவர் அங்கு சென்று தெய்வவிக்கிரகத் தினை எடுத்து மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில், சேர்த்தார். இதனை கேள் வியுற்ற அப்பிரதேச மக்களும் இலங்கை இராணுவத்தினரும் அங்கு விரைந்து அந்த உருவச்சிலையினை பார்வையிட்டதோடு, அதுதொடர்பான தகவல்களை இராணுவத்தினரும், பொலிசாரும் திரட்டிச் சென்றுள்ளனர்.

இவ்வாலயம் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது முற்றாக சேதமடைந்து தற்போது புதுப்பொலிவு கண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com