Sunday, November 24, 2013

தலைமைத்துவப் பயிற்சி வேலைத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் ஜனாதிபதி!

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை இணைத்துக் கொள்ளப்படவுள்ள புதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வழங்கும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பணம் வைபவம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்றது.

25 ஆயிரம் மாணவர்களுக்கு 3 கட்டங்களாக இம்முறை தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படும். 3 வாரங்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது. புதிய மாணவர்களுக்கு உயர்தர கல்விக்கும் பல்கலைக்கழக கல்விக்கும் இடையிலான வித்தியாசங்களை உணர்த்துவது, பூகோள ரீதியிலான முன்னேற்றங்கள், இலங்கை சமூக பொருளாதார மாற்றங்கள் ஆகியவற்றை உணர்த்தி இலங்கையின் எதிர்கால பயணம், நோக்கு தொடர்பாக அவர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதற்கு இளைஞர்களை இதில் இணைப்பதே இதன் நோக்கமாகும்.

மாணவர்களின் மன வலிமை தலைமைத்துவ குணாம்சங்கள், குழு ஒருமைப்பாடு, ஆகியன தொடர்பாகவும் செயற்பாட்டு ரீதியிலான அறிவு, பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி வகைகள் குறித்தும் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என வைபவத்தில் உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

தலைமைத்துவ பயிற்சியினூடாக இந்த மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பமுனை ஏற்படுவதை நாங்கள் அவதானிக்கின்றோம். தமது வாழ்க்கையில் புதிய அனுபவங்களுடன் வெளியேறி செல்வதை நாம் அவதானிக்கின்றோம். எமது பல்கலைக்கழக தொகுதியில் பொறியியல் பீடங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. முகாமைத்துவ பீடங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. புதிய மருத்துவபீடம் ஆரம்பிக்கப்படுகின்றன. பல்கலைக்கழக வசதிகள் விரிவுபடுத்தப்படுகின்றன. புதிய பாடநெறிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. நீங்கள் இலங்கைக்கு மட்டுமல்ல முழு உலகிற்கும் சிறந்த செல்வங்களாக மாற வேண்டும். இந்த நாட்டின் உயர்கல்வி அதி உன்னத நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

பாடநெறியின் இறுதியில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படும் மின்னேரியா பீறாங்கிப் படை பயிற்சி கல்லூரியில் இடம்பெற்ற வைபவத்தில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயாரட்னாயக்கவும்; உரையாற்றினார்.

இராணுவத்திற்கு இது போன்ற பணிகளை முன்னெடுக்க முடியுமா என நீங்கள் கேட்பீர்கள். உலக சாதனையாக இந்த நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை நாம் ஒழித்தோம். அந்த குழுவின் அங்கத்தவர்களே இந்த தலைமைத்துவ பயிற்சியை வழங்குகின்றார்கள். அவர்களுக்கு அந்த நம்பிக்கை உண்டு. அதற்கான திறமை உண்டு. அதற்கான பயிற்சியை நாம் எடுத்துள்ளோம்.

திட்டங்களை வகுத்துள்ளோம். நம்பிக்கையுடன் இதற்கு முகம் கொடுங்கள். எமது நாட்டின் எதிர்காலத்தை இவர்களே பொறுப்பேற்கவுள்ளார்கள் ஆவேசமுள்ள மனோ நிலையிலிருந்து விடுபட்டு, மதிநுட்பத்துடன் கூடிய இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிரதி அமைச்சர்களான நந்திமித்திர ஏக்கநாக்க, சிறிபால கம்லத், சந்திரசிறி சூரியரச்சி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment