மக்கள் மத்தியில் ம.வி.மு பற்றியிருந்த நல்லெண்ணம் தற்போது தீயெண்ணமாய்! - லால்காந்த
மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து அங்கத்தவர்கள் விலகிச் செல்வதனால், மக்கள் மத்தியில் இக்கட்சி பற்றியிருந்த நல்லெண்ணம் குட்டிச் சுவராகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் கே.டீ. லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
சகலருக்கும் தொழிற்சங்கம் அல்லது விவசாயச் சங்கம் உருவாக்கிக் கொள்ள முடியும் எனவும், ஆயினும் இந்நாட்டில் இருக்கின்ற பொலிஸாருக்காக குரல் கொடுப்பதற்கு எந்தவொரு நபரும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கெஸ்பேவ பிரதேசத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் அலுவலகம் ஒன்றை நிறுவும் கூட்டமொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல பொலிஸ் அதிகாரிகளுக்காக ஒழுங்கான சம்பளம் இல்லை எனவும், தங்களது சொந்த மோட்டார் சைக்கிளைக் கூட தமது பணிக்காகப் பயன்படுத்துவதாகவும், தற்போதைக்கு வீதியில் பயணிக்கின்ற மிகப் பழைய வாகனமாக பொலிஸாரின் ஜீப் வாகனங்களே இருக்கின்றன எனவும் அவர் அவ்வமயம் தெளிவுறுத்தியுள்ளார்.
தனது இளமைக் காலத்தில் தான் கண்ட மிகவும் சிறப்பான வாகனமாக பொலிஸாரின் ஜீப் வண்டியைக் கண்டதாகவும், அந்த வாகனமே பாதையில் சென்ற அதிசிறந்த வாகனமும், அதற்கு ஈடு இணையாக எதுவும் இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
அதேபோல, பொலிஸ் அதிகாரியொருவர் யாரேனும் ஒருவரை வீதியில் சந்தித்து அவரிடம் ஏதேனும் பணம்தொகை பெற்றுக்கொள்வாராயின் அதற்குத் தான் உடன்படுவதாகவும், ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதை விட அந்த செயலினால் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது வீட்டிற்கு மாப் பைக்கற்று ஒன்று வாங்கிச் செல்லலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment