கனடாவில் தன் பெயரை வைத்து பணமோசடி செய்கிறார் அமா என்கிறார் முன்னாள் ஜனாதிபதி!
தனது பெயரை வைத்து, கனடாவில் ஒருவர் பண வசூலிப்பு மோசடி நடைபெறுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரத்துங்க, கொழும்பிலு ள்ள ஊழல் புலனாய்வுப் பிரிவின் பிரதம நீதிபதி ஏ. நிஷாந்த பீரிஸிற்குத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டுள்ளவர் திலூபா விஜேசேக்கர எனும் பெயருடைய அமா என்பவரே எனவும் முன்னாள் ஜனாதிபதி பொலிஸ் மாஅதிபருக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளதாக ஊழல் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
மனுவுடன் தொடர்புடைய கைத்தொலைபேசி இலக்கம் தொடர்பில் பூரண விபரம் சேகரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள புலனாய்வுப் பிரிவினர், அந்தப் பெண் தொடர்பான எந்தவொரு தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment