அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்தியின் முன் செல்ல வேண்டும்: வட மாகாண ஆளுநர்
மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் வடக்கு மாகாண சபை அபிவிருத்தி திட்டங்களில் முன்னோ க்கி சென்றால் மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு நிறை வேற்ற முடியும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண மக்களின் முன்னேற்றத்திற்காகவும், எதிர் கால சுபீட்சத்திற்காகவும் விடாமுயற்சியுடன் நேர்மையாதும் பொறுப்பு வாய்ந்த துமான அபிவிருத்தி கொள்கைகளை உருவாக்கி செயற்பட வேண்டியதும் அவசிய மானது என்று அவர் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண சபையின் இரண்டாம் கட்ட அமர்வுகள் இன்று(11.11.2013) திங்கட் கிழமை கைதடியிலுள்ள மாகாண சபை மண்டபத்தில் ஆரம்பித்தபோது வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆற்றிய கன்னியுரையிலேயே அவர் இவற்றை தெரிவித்தார்.
மேலும் மாகாண சபையின் முறைமைகளுக்கு அமைவாகவும், நாட்டின் இறை மையை மதித்தும் நடக்க வேண்டியது வடக்கு மாகாண சபையின் கடமை என்று வலியுறுத்தியுள்ள ஜீ.ஏ.சந்திரசிறி, வடக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள் தங்களின் பொறுப்புக்களை சகல மக்களின் நன்மைகளுக்காக முழுமையாக செயற்படுத்துவார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
1 comments :
He is right,
We have get along with the central government for the full benefits of our province and the people.
We can't achieve anything in the way of opposition, disagreement and bitterness.
We should change our usual opposing attitude and animosity and bellicosity.
Post a Comment