வடக்கு அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் ஜனவரியில்!
வடக்கு அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என பெருந்தெ ருக்கள், துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பிரேமசிறி தெரிவித்தார். 4 கட்டங்களாக வடக்கின் அதிவேக பாதை நிர்மாண பணிகள் இடம்பெறவு ள்ளன
நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்படும் இந்த வீதியின் முதல் கட்டப் பணிகள் ஹெண்டரமுல்லையில் இருந்து மீரிகம வரை நிர்மாணிக்கப்படுவதுடன், இரண் டாம் கட்ட நிர்மாணப் பணிகள் குருணாகலில் இருந்து நிர்மாணிக்கப்பட உள்ள துடன், மூன்றாம் கட்டம் பணிகள் மீரிகமவில் இருந்து கண்டி வரை நிர்மாணிக் கப்பட உள்ளது.
தொடர்ந்து 4 ஆம் கட்ட நிர்மாணப் பணிகள் குருணாகலில் இருந்து தம்புள்ளை வரை நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் 5 ஆம் கட்டமாக வடக்கிற்கான அதிவேக பாதையின் நிர்மாண பணிகள் ஆரம்பமாகவுள்ளது. நாடெங்கும் உள்ள வீதிகளை நவீனமயப்படுத்துவது மட்டுமல்லாது அதிவேக பாதைகளை விஸ்தரிப் பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பணிகள் அனைத்து ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது எனக்குறிப்பிட்ட அமைச்சரின் செயலாளர் தென் பகுதிக்கான அதிவேக வீதியின் காலி முதல் மாத்தறை வரையான பகுதி 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment