பதவியை மீண்டும் தக்கவைத்து கொண்டார் ரணில்!
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் தனது தலைவர் பதவியை மீண்டும் தக்கவைத்து கொண்டுள்ளார். அத்துடன் தலைமை த்துவ சபையொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைமைப் பதவி கரு ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டுள்ள துடன், தலைமைத்துவத்தின் அனைத்து பொறுப்புக்களை யும் செயற்குழுவின் அனுமதியுடன் தம்வசமே வைத்து கொண்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியில் நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்சினைக்கு செயற்குழு கூட்டத்தின் போது தீர்வு காணப்படும் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியை நேசிக்கும் தேரோக்கள் குழுவொன்று ரணில் விக்ரம சிங்கவை தலைமை பதவியிலிருந்து நீக்கி கட்சியின் பொறுப்புக்களை தலைமை த்துவ சபையொன்றிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரேரணைகளை முன் வைத்திருந்தது. அத்துடன் ரணில் விக்ரமசிங்க கட்சியிலிருந்து விலக வேண்டும் எனவும் கட்சியின் பொறுப்புக்கள் தலைமைத்துவ சபையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் ஒரு சிலர் எதிர்பார்த்தனர்.
செயற்குழு கூட்டத்தின் போது ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பதவி உறுதிபடுத்தப்பட்டுள்ளதுடன் பிரேரிக்கப்பட்ட தலைமைத்துவ சபையும் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான உறுப்பினர்களாக ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இச்சபையின் தலைவைராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் செயற்குழுவினால் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேசிய தலைமைத்துவம் எனும் பெயரொன்றையும் சூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தலைமைத்துவ சபைக்கு ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவின் பெயர் பிரேரிக்கப்பட்ட போதும் ஆனால் அவர் அப் பதவினை ஏற்கமறுத்துள்ளார்.
0 comments :
Post a Comment