உலகிலேயே மிகவும் அபாயகரமான மலசலக்கூடமாக சைபீரியாவில் உள்ள மலசலக்கூடம் கருதப்படுகின் றது. இம்மலசலக்கூடமானது கடல் மட்டத்திலிருந்து 6000 மீட்டர் உயரத்தில் மலை உச்சியின் நுனி பகுதியில் தொக்கி நிற்கும் வகையில் அமைக்கப்பட் டுள்ளது.சைபீரியாவின் அல்டாய் மலைச் சிகரத்தில் உள்ள ஒரு மலை உச்சியிலே இந்த மலசலக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மலை உச்சியில் ஒரு வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பணியாற்றுகிறவர்களுக்காக இம்மலசலக்கூடத்தினை நிர்மாணித்துள்ள னர்.இந்த வானிலை மையத்திற்கு மாதம் ஒருமுறை யாராவது வருவார்களாம். வந்து அங்கு சேர்ந்திருக்கும் வானிலை குறித்த புள்ளிவிவரங்களை எடுத்துச் செல்வார்களாம். அப்படி வருபவர்களின் வசதிக்காகவே இந்த மலசலக்கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த மலசலக்கூடமானது மலை உச்சியில் கிட்டத்தட்ட நுனிப்பகுதியில் தொக்கி நிற்பது போல இருப்பதால்தான் உலகிலேயே அபாயகரமான கழிப்பறை என்ற பெயரைப் பெற்றுள்ளது. இக்கழிப்பறையானது 1939ஆம் ஆண்டு நிர்மாணிக்க ப்பட்டுள்ளது.. அன்று முதல் இன்று வரை இம்மலசலக்கூடம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment