Saturday, November 23, 2013

இந்த பந்தா முதலமைச்சருக்கு தேவைதானா? காக்க வைத்த சி.வி.விக்கினேஸ்வரன்

வவுனியாவில் இடம்பெற்ற சத்தியசாயிபாவா பிறந்த தினநிகழ்வு, கூட்டுறவு வங்கி திறப்பு விழா, உள்ளூராட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பு ஆகியவற்றுக்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இன்றைய தினம் வருகைதந்தார்.

அவரை வவுனியா குடியிருப்பு ஆலயத்தில் ஈரந்து ஊர்வலமாக அழைத்து வந்து பசார் வீதியில் திறப்பு விழா நிகழ்வு இடம்பெற்றது. இதனால் அவரது ஊர்வல வீதிப் போக்குவரத்துக்கள் 30 நிமிடங்கள் வரையில் தடைப்பட்டது.

இதேபோன்று ஏனைய நிகழ்வுகளின் போதும் வீதிப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டன. இதன் காரணமாக வைத்தியசாலை மற்றும் அவசர தேவைகளுக்காக வெயிலுக்கும் மத்தியில் வருகை தந்த நோயாளர்கள், அரச ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர்.

எமது நாட்டின் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைக்காக வருகை தந்த போது கூட ஏ9 போக்குவரத்து பாதை 10 நிமிடங்களே தடைப்பட்டது. ஆனால் முதலமைச்சருக்கு மட்டும் ஏன் இந்த பந்தா? தமிழ் மக்களின் வாக்கிலே வந்து விட்டு அவர்கள் வைத்திசாலை செல்ல விடாமலும் ஏனைய தேவைகளை உடனடியாக செய்ய விடாமலும் தடுப்பதால் ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பு? நீதியரசராக இருந்த முதலமைச்சருக்கு இது கூட தெரியாதா? வாக்கு போட்ட மக்களை காக்க வைத்து துன்பப் படுத்துவதில் இவ்வளவு இன்ரஸ்ற்றா வட மாகாண முதலமைச்சருக்கு?

No comments:

Post a Comment